குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

பிறரைவிட மேலோங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு மேன்மை தரும் ஆண்டாக அமையும். தேவையற்ற தொடர்புகளைத் துண்டித்து விடுவீர்கள். ஆக்கப் பூர்வமான செயல்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். யாரையும் வெறுத்து ஒதுக்காமல் முடிந்த வரை அனுசரித்து செல்வீர்கள். கலை துறையினருக்கு நல்ல யோக காலமாக அமையும். வேகமாக வளரும் இந்த காலத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். 
 
உங்களின் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது இதுவரை அடைய முடியாமல் போன எல்லா விடயங்களிலும் வளர்ச்சிப் பெற்று நலம் பெறுவீர்கள். தனாதிபதி லாப ஸ்தானத்தில் நீசம் பெற்று நீச பங்க ராஜயோக பலனை தருவதால் சாதாரண நிலையில் இருப்பவருக்கு கூட எதிர்பாராத பல நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த வீடு வாங்குதல் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குதல் நன்மை உண்டாகும். முக்கிய பிரமுகரின் சந்திப்பு பின் காலத்தில் நல்ல பலனை பெற்று தரும். 
 
குரு பெயர்ச்சிக்கு பின்பு வேலை வாய்ப்பும், சொந்த தொழிலும் அமைய பெறுவதும், சீக்கிரம் திருமணம் அமைய பெறுவதும் உண்டாகும். கணவன் - மனைவி உறவு பலப்படும். குழந்தைகள் கல்வி வளம் பெறும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு மேலும் சில பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களின் வாழ்க்கை சூழ்நிலைகள் மாற்றி வளம் பெறுவீர்கள். உடலினை சரியாக பராமரித்து நற்பெயர் பெறுவீர்கள். பொருளாதார நிலை நன்கு உங்களுக்கும் பயன்படச் செய்யும்.

பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி, தொடர்ந்து வேண்டிக் கொள்ள சகல நலன்களும் உண்டாகும்.